கிறிஸ் கெய்ல் பெரிய பெரிய சிக்சர்களுக்கும் சரவெடி டி20 இன்னிங்ஸ்களுக்கும்,சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்றவர்.

தன் வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்பவர் கெய்ல், அதனால் அவர் பேச்சும் வெளிப்படையாகவே இருக்கும், ஆனால் அது பல வேளைகளில் சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடும்.

ஆஸ்திரேலியாவில் நடந்த 2016-ம் ஆண்டு பிக்பாஷ் டி20 லீகின் போது ஒரு போட்டியில் டிவி தொகுப்பாளினி மெல் மெக் லாஃப்லின் என்பவரை நோக்கி, “உங்கள் கண்களை முதல் முறையாகப் பார்க்கிறேன்” என்றும் “இந்தப் போட்டியில் வென்ற பிறகு உங்களுடன் மது அருந்துவேன்” என்றார். இதோடு ‘டோண்ட் ப்ளஷ் பேபி’ (வெட்கப்படாதே பேபி) என்று கூறியதும் கடும் சர்ச்சைகளைக் கிளப்பி பிபிஎல் அணியான மெல்பர்ன் ரெனெகேட்ஸ் கெய்லுக்கு 10,000 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தது.

அப்போது கிறிஸ் கெய்ல் மீது கடும் விமர்சனங்களைப் பலரும் வைத்தனர், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் தற்போதைய சிறப்பு வரணனையாளருமான இயன் சாப்பல், ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகம் நெடுகுமே கிறிஸ் கெய்லை ஒப்பந்தம் செய்யக் கூடாது, இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிற கிளப்புகளுக்கும் அறிவுறுத்தினால் மகிழ்ச்சியடைவேன்’ என்றார்.

கெய்ல் பிற்பாடு இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, ‘இது ஒரு ஜோக்தான்’ என்று மழுப்பினார்.

Image result for chris gayle ian chappell

இந்நிலையில் மும்பை மிரர் ஊடகம் கெய்லிடம் இது பற்றி எழுப்பிய கேள்விக்கு  பதில் அளித்துள்ளார். இயன் சாப்பல் உங்களை தடை செய்ய வேண்டும் என்றாரே? இதற்கு கெய்ல் கூறுகையில்,  யார் அந்த இயன் சாப்பல்? என்று ஆவேசத்துடன் பதில் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.