காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,429 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம், விநாடிக்கு 5,060 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 5,429 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டுர் அணைக்கு  நீர்வரத்து தொடர்ந்து வருவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம், 35.84 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 36.72 அடியாக உயர்ந்துள்ளது.