இந்தோனேசியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றடைந்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி நேற்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை ((Joko Widodo)) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய அவர், ஜகார்தாவில் இருந்து மலேசியாவுக்கு இன்று காலை புறப்பட்டார். தனி விமானம் மூலம் கோலாலம்பூர் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மதுவை சந்திக்கும் மோடி, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதை தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார்