உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,எரிபொருள் விலை உயர்வு பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தின் போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக  விளக்கமளித்துள்ளார். அதனால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும் அதனால் பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லை என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுப் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.