இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன.

கைரானா தொகுதியில் பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானார். அந்தத் தொகுதியில் ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங் பாஜக சார்பில் போட்டியில் உள்ளார்.  இவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.

Image result for மோடி

வெற்றி முகத்தல் உள்ள தபசம் ஹசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவுக்கு தோல்விதான் என்பதை எனது வெற்றி நிருபிக்கும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்தனர். இருப்பினும் மக்கள் தீர்ப்பு அவர்களை வீழ்த்தியுள்ளது. 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் இதே முறையில் பாஜகவை தோற்கடிப்போம். மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்’’ எனக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.