பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்தி பாலாஜி ,மதுரையில், நூறு கோடி ரூபாய் செலவில், பால் குளிரூட்டும் நிலையத்தோடு அமைக்கப்படும் ஐஸ்கீரிம் தொழிற்சாலையை, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார் என தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில், மதுரை மத்திய தொகுதி உறுப்பினர் ராஜன்செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கும் பணிகள் மீது வழக்குகள் நிலுவையில் இருந்ததால் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.