திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சக்கிலியன்கொடை கிராமத்தில் உள்ள வேட்டைக்கார சுவாமி கோயிலில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. வானவேடிக்கை நிகழ்ச்சிக்காக ஏராளமான அதிநவீன பட்டாசுகள் வாங்கி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. கணேசன்,செல்வராஜ் இருவரும் பட்டாசுகளை வெடிக்க ஆயத்தமாகி கொண்டிருந்தனர்.

எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வைத்திருந்த பெட்டிகள் மீது  தீப்பொறி, விழுந்தன. இதனால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதில் கணேசன், செல்வராஜ் இருவரும் உடல் சிதறி பலியாகினர்.இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.