திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் நாள் முழுவதும் விவாதிக்க தயாராக இருப்பதாக  கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு அறைகுறையானது என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையை கூட்டி, எந்த நீதிமன்றத்தாலும் தலையிட முடியாத தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது குறித்து, சட்டமன்றத்தில் நாள் முழுவதும் கூட விவாதிக்க திமுக உறுப்பினர்களும், தாமும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.  இதற்கு முதலமைச்சர் தயாரா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்  என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.