மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ,ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் தங்களை ஓரம்கட்டிவிடுவார்களோ என்று, திமுகவிற்கு அச்சம் எழுந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தவறு யார் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்கள் தங்களை ஓரம்கட்டிவிடுவார்களோ என்று திமுகவிற்கு அச்சம் எழுந்திருப்பதாகவும் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.  2006ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக அதிமுகவினரை சட்டபேரவையிலிருந்து வெளியேற்றி ஜனநாயகத்தை திமுக கேலி கூத்தாக்கியது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

திமுக ஆட்சிக்காலத்தில், 37 முறை குறுக்கீடுகள் இருந்த போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா தனி ஆளாக சட்டப்பேரவையில் பங்கேற்று பேசியதாகவும் அவர் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையை புறக்கணித்துள்ள திமுக, சட்டமன்றத்தில் மாண்பு இல்லை எனக் கூறுவதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.