காரை கள்ளச்சாவி போட்டு சென்னை மயிலாப்பூரில்  திருடிச் சென்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாப்பூர் கபாலி தோட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் டாடா இண்டிகோ கார் கடந்த ஐந்தாம் தேதி திருடப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஒருவன் கள்ளச்சாவி போட்டு காரை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவனை போலீசார் கைது செய்தனர். கார் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. கார் திருட்டுக்கு உடந்தையாக இருந்த கணேஷ் என்பவனை பிடித்தால் மட்டுமே கார் குறித்த விவரம் தெரிய வரும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.