ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் மஞ்சு தேவி. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவன் இறந்த பிறகு அவர் குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது குழந்தைகளை வளர்க்க கணவன் பார்த்த பணியை தான் பார்க்க விரும்பினார்.

அவரது கணவர் ரெயில்வேயில் சுமை தூக்குபவராக பணிபுரிந்து வந்தார். அவர் தனது கணவர் செய்து வந்த வேலை செய்ய தொடங்கினார். முதலில் கடினமாக இருந்தாலும் அவரது குழந்தைகளுக்காக செய்யும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

 ஆண்கள் அதிகம் கொண்ட துறையில் பெண்ணாக சாதனை படைத்த மஞ்சு தேவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரின் சாதனையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பாராட்டி பரிசளித்தது குறிப்பிடதக்கது.