இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன.

பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து  கைரானா தொகுதியில்  கூட்டாக வேட்பாளரை நிறுத்தியுள்ளன.அங்கு  காலை 9 மணி நிலவரப்படி பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது.

மேற்குவங்க மாநிலம் மகேஷ்தலா சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளார் துலால் சந்திர தாஸ்  20,000 வாக்குகள் வித்தியாசத்தில்  முன்னிலை பெற்றுள்ளார்.

தற்போது  கர்நாடகா ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பெங்களூர் ஆர்.ஆர். நகர் தொகுதியில் போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் கடந்த 28ம் தேதி இதர இடைத்தேர்தல்களுடன் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகளும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.