கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா வெற்றி பெற்றார்.

கர்நாடகாவில் கடந்த 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சுமார் பத்தாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது. இதையடுத்து, கடந்த 28ஆம் தேதி தேர்தல் நடந்தது.

அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முனிரத்னா போட்டியிட்டார். பாஜக சார்பில் முனிராஜு கவுடாவும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஜி.ஹெச்.ராமச்சந்திராவும் போட்டியிட்டனர்.இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த முனிரத்னா, 41 ஆயிரத்து 162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உத்தரப்பிரதேசத்தில் நூர்பூர் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 6211 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.