சிபிஐ அதிகாரிகள்,கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில்  அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

கர்நாடகத்தில் ராமநகரத்தில் உள்ள கார்ப்பரேசன் வங்கிக் கிளையில் புதிய ஐந்நூறு ரூபாய், இரண்டாயிரம் ரூபாய்க் கட்டுகளை ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமலேயே அப்போதைய அமைச்சரான சிவக்குமாரின் உதவியாளர் பத்மநாபையாவுக்குக் கொடுத்துள்ளனர் என்பது புகார். இது தொடர்பாகக் கார்ப்பரேசன் வங்கியின் முதன்மை மேலாளர் பிரகாஷ், பத்மநாபையா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, இந்தப் பணக் கட்டுகள் யாருக்காக வாங்கப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று பெங்களூரில் உள்ள பத்மநாபையாவின் வீடு, கனகபுரா வட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இருவரின் வீடுகள் ஆகியவற்றில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.