முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜனநாயக கடமையாற்ற வரலாம் என்றும்  தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை உரிமத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்ற திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அழைக்க வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய டிடிவி தினகரனும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை அவை
நடவடிக்கையில் பங்கேற்க அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்கு விளக்கமளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தாங்கள் எந்த தவறான கருத்துகளையும் அவையில் தெரிவிக்கவில்லை எனவும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுக செய்த தவறு வெளிவந்துவிடும் என்பதாலேயே அவர்கள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்றால் ஜெயலலிதா போல இருக்க வேண்டும் என்று கூறிய முதல்வர் பழனிசாமி, 2006ம் ஆண்டில் தனி ஆளாக சட்டப்பேரவைக்கு வந்து ஜனநாயக கடமையாற்றிவர் ஜெயலலிதா என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.