பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ,பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது ஊழியரின் தவறால் நிகழ்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை ஒரு பைசா மட்டும் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்க தொடங்கியதில் இருந்து ஒரு பைசா, 12 பைசா, 27 பைசா என விலை உயரவும், குறையவும் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

ஒரு பைசா விலை மாற்றம் நிகழ்வது இது முதல் முறை அல்ல என்றும், ஆனால் இன்றைய தினம் ஊழியரின் தவறால் இவ்வாறு ஏற்பட்டு விட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். கேரள அரசு பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளதற்கு வரவேற்பும், நன்றியும் தெரிவித்த பிரதான், அனைத்து மாநில அரசுளும் விலையை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.