சர்வதேச கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்டில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த  திட்டமிட்டுள்ளது. அனில் கும்பளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி மும்பையில் நடைபெற்ற 2 நாள் ஆலோசனைக்குப் பின் கடுமையான விதிகளை பரிந்துரைத்துள்ளது.

அண்மையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாருக்கு ஆளாகியதையடுத்து பந்தை சேதப்படுத்துதல், சரியாக விளையாடாமல் இருத்தல் போன்றவற்றுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிநபர் வசைபாடுதல், தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.