பாஜகவின் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த சில தினங்களுக்கு முன், திமுகவின் கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்து மறைமுகமாக தாக்கும் வகையில்  ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு திமுக.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து போராட்டத்தில் குதித்தனர். மேலும் அவர்மீது வழக்கு பதியுமாறும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

எச் ராஜா அந்த பதில், ‘தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.’ என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று எச் ராஜாவை கைது செய்ய கோரி அளித்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், ”இந்த வழக்கில் போதுமான முகாந்திரம் இருந்தால் எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.