தன் திரைப்படம் ஓடுவதற்காக இளைஞர்களை புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக்கிய நடிகர் ரஜினிகாந்த்-தான் தமிழகத்தின் சமூக விரோதி என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

இது குறித்து கூறுகையில், காவிரி வாரியம் கோரி அமைதியான முறையில் போராடிய என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் கைது செய்து பாழடைந்த கட்டடத்தில் உணவு, நீர் தராமல் என்னை கொடுமைப்படுத்தினர். உணவு அருந்தாததாலும், சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலும் என் உடல் சோர்ந்து விட்டது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கைதுசெய்தது நெய்வேலி போலீஸ். உடல்நலக் குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்முருகனை, கைதுசெய்து அழைத்துச்சென்றனர் நெய்வேலி போலீசார்.

ஐசியு-வில் இருந்த என்னை கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்  .தமிழ் உணர்வுடன், தமிழர்களுக்காக போராடுவதால் தான் என்னை கைது செய்கிறார்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

முன்னதாக  மே 25 ஆம் தேதி இரவு தூத்துக்குடி சென்ற வேல்முருகனை அங்குள்ள போலீசார் கைது செய்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் ஓப்படைத்தனர். இதையடுத்து அவர் கடந்த மே 26 ஆம் தேதி காலை திருக்கோவிலூர் முதலாவது குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வேல்முருகன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்கோறால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேல்முருகன் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மருத்துவமனையில் உள்ள வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர் .124ஏ,153, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.