மக்களவை தொகுதிகளான உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து போன்ற நான்கு தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலஸ் கடேகோன், உத்தர பிரதேசத்தில் உள்ள நூர்பூர், பீகாரில் உள்ள ஜோகிஹாத், ஜார்கண்டில் உள்ள கோமியா, சில்லி, கேரளாவில் உள்ள செங்கனூர், மேகாலயாவில் உள்ள அம்பாதி, பஞ்சாபில் உள்ள சாகோட், உத்தரகண்டில் உள்ள தாரளி, மேற்கு வங்கத்தில் உள்ள மகேஷ்தலா, கர்நாடகவில் உள்ள ஆர்.ஆர். நகர் ஆகிய பத்து சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த 14 தொகுதிகளுக்கான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் ஆரம்பம் ஆகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.