பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஊழல் புகாருக்கு உள்ளானவரை நியமிக்கக் கூடாது எனப்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கத் தேர்வுக்குழு பரிந்துரைத்தவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸ் 1998-2001 காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றியபோது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணல் நடத்தும் முன்பே சுபாஷ் சந்திர போசைப் புதிய துணைவேந்தராக நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரைத் துணைவேந்தராக நியமிக்கும் முடிவைக் கைவிட்டுத், தகுதியும், திறமையும் கொண்ட, அப்பழுக்கற்ற ஒருவரைத் துணைவேந்தராக நியமிக்கத் தமிழக ஆளுநர் முன்வர வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.