ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரனை 3 ஆண்டுகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணிபுரியும் ராஜேந்திரன், கல்வி மற்றும் நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் கொண்டவர் என்று கூறப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளாக ஆசிரியராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயக்குனர் மற்றும் துறை தலைவராக பணிபுரிந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.