வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு சென்னை உட்பட வட தமிழகத்தில் கடுமையான வெயில் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.