இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்று போலீஸ் தப்பாக்கிசூடு மற்றும் தாக்குதலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். அப்போது ஒருவர் “நீங்க யாரு?” என கேட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

”போலீஸ் துப்பாக்கிசூடு நடத்த காரணம் முதலில் சமூக விரோதிகள் அவர்களை தாக்கி, கலெக்டர் அலுவலகத்தை தாக்கியது தான்” என ரஜினி பத்ரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசினார்.

மேலும் இப்போது சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு எதிராக பேசி வருகின்றனர். நடிகர் சித்தார்த் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

“இவர்கள் அடுத்து என்ன சொல்வார்கள் தெரியுமா.. இத்தனை வருடமாக தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான்” என சித்தார்த் தெரிவித்துள்ளார்.