திருச்சி காவல்துறைக்கு,நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை ஜூன் 4 ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது எனத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீமான் தாக்கல் செய்த மனுவில், இரு கட்சித் தொண்டர்களுக்கும் மோதல் நடக்கும் போது தான் அந்தப் பகுதியில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனு இன்று நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது சீமான் உள்ளிட்ட ஆறு பேரை ஜூன் 4 ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என திருச்சி காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.