சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ட்ரைலருக்கு இணையத்தில் கிடைத்த வரவேற்ப்பை பார்த்தால் இந்த படத்திற்கு எந்த அளவுக்கு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உள்ளது என்பது தெரியும்.

இந்நிலையில் இந்த படத்தை கர்நாடகாவில் தடை விதிக்கபட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு காரணமாக இப்படி செய்துள்ளனர்.

இந்த பிரச்னையை பற்றி கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள நடிகர் விஷால் “ரஜினிக்கும் காவிரி பற்றி பேச உரிமை உள்ளது. இந்த பிரச்சனை பற்றி பேசி முடிவெடுக்கப்படும். காலா பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடமும் பேச தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.