சாதி மோதலில் சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில்  இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊர்மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு சமூகத்தினர் நடத்திய தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்துக் கச்சநத்தம் ஊர்மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று இரண்டாம் நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சு நடத்தி அவர்களைக் கலைந்துபோகச் செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.