தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,விபத்து உள்ளிட்ட அவசர கால மருத்துவ உதவிக்கு வரும் 108 ஆம்புலன்ஸ் செல்லக்கூடிய நேரம் முன்பு இருந்ததைவிட, சரி பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். விபத்து நடத்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லக்கூடிய  சராசரி நேரமானது 17 நிமிடங்களில் இருந்து 8.32 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதுவே, கிராமப்புறங்களில் 13.30 நிமிடங்களாக, குறைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.