ஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.?

 

கார் ஓட்ட தெரியாதவர்களுக்கும், கார் ஓட்ட பழுகுபவர்களுக்கு மிக சாதாரணமாக எழும் சந்தேகம் கார்களில் ஏன் நடுவில் ஸ்டியரிங் வீல் இல்லை? என்பது தான். அதற்கான விளக்கத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரோட்டில் வலது அல்லது இடதுபுறம் செல்ல வேண்டும் என்ற விதிக்கும் காரின் ஸ்டியரிங் வீல் அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அமைப்பு என்பது டிரைவரின் வசதியை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. காரின் வலது மற்றும் இடதுபுறம் மட்டுமே ஸ்டியரிங் வீல் இருப்பதற்கான முக்கியமான காரணம் டிரைவர் ரோட்டின் நடுப்பகுதியை சுலபமாக கணக்கிட்டு வண்டி ஓட்டுவதற்காக தான்.

ரோட்டின் இடதுபுறம் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற இந்தியா போன்று விதி உள்ள நாடுகளில் விற்பனையாகும் கார்களில் வலது பக்கம் ஸ்டியரிங் வீல் இருக்கும். அதேபோல் ரோட்டின் வலதுபுறம் தான் செல்லவேண்டும் என விதியுள்ள நாடுகளில் காரின் இடது பக்கம் தான் ஸ்டியரிங் வீல் இருக்கும். இதன் மூலம் நாம் ரோட்டின் நடுப்பகுதியை எளிதாக கணக்கிட்டு வாகனத்தை ஓட்ட முடியும்.

ஓவர்டேக் செய்யும் சமயங்களில் எதிரில் வரும் வாகனங்களை எளிதாக கணிக்க முடியும். இதுவே காரின் நடுவில் ஸ்டியிங் வீல் இருந்தால் பாதிக்காரை அடுத்த லேனிற்கு கொண்டு சென்ற பிறகே எதிரில் வரும் வாகனத்தை கவனிக்க முடியும். இதனால் விபத்துக்கள் நடக்கலாம்.

இது காருக்குள் இருக்கும் இட வசதி ஸ்டியரிங் வீலை காரின் நடுவில் வைத்து விட்டால் காரின் முன் பக்க சீட்டில் டிரைவருக்கு மட்டுமே இடம் இருக்கும் மற்றவரகளுக்கு சீட் அமைக்க போதுமான இடம் இருக்காது. காரின் ஸ்டியரில் வீலை ஏதேனும் ஒரு புறம் இருந்தால் இன்னொரு சீட் அமைத்து காரில் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும்.

இவைதான் கார்களில் ஸ்டியரிங் வீலை வலது அல்லது இடதுபுறம் அமைப்பதற்கான முக்கியமான காரணங்கள். இந்த விதி கார்களுக்கு மட்டுமல்ல ரோட்டில் நேரடியாக ஓடும் பஸ், லாரி, டிரக், டிரெய்லர், உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். ஆனால் ரோட்டில் இயங்காத வேறு இடங்களில் இயங்கும் வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தாது.

உதாரணத்திற்கு விவசாய பணிகளுக்கான பயன்படும். டிராக்டர்கள், கதிர் அறுப்பு வாகனங்கள், மீட்பு/சிவில் பணிக்காக உதவும், புல்டோசர்கள், ஜேசிபி, போக்லைன், மரத்தடியை தூக்கும் இயந்திரம், ரோடு போடும் இயந்தியரம் ஆகிய வாகனங்களை கவனித்தீர்கள் என்றால் அதன் நடுவில் தான் ஸ்டியரிங் வில் இருக்கும். இது நேரடியாக ரோட்டில் செல்லாது என்பதாலும், இது போன்ற வாகனங்களில் பயன்பாட்டிற்கு ஸ்டியரிங் வீல் நடுவில் இருந்தால் தான் அவர்கள் செய்யும் வேலைய சரியாக கணித்து செய்ய முடியும்.

இது போக கார் ரேஸிற்காக பயன்படுத்தப்படும் F1 ரக கார்களையும் கவனித்தீர்கள் என்றால் காரின் நடுவில் தான் ஸ்டியரிங் வீல் இருக்கும். கார் ரேஸில் அதிக இடவசதி தேவயில்லை, மேலும் கார் சிறிதாக இருப்பதால் ஓவர் டேக் செய்வதிலும் சிரமம் இருக்காது என்பதால் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மெக்லான் F1 என்ற கார் நடுவில் ஸ்டியரிங் வில் இருக்கும் படி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்டிருந்தாலும் இந்த காரின் லுக்கிற்காக பலர் இந்த காரை வாங்கி ரோட்டில் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் வேறு கார்களை வாங்கி அதை நடுவில் ஸ்டியரில் வீல் வரும் வண்ணம் ஆல்டர் செய்து விடுகின்றனர்.