மிகவும் ஒழுக்கமில்லாத நபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமே

எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமே , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மிகவும் ஆரோக்கியத்துடன் இருந்தாலும், அவர் ஒழுக்கமில்லாத நபர் என விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், மாஃபியா தலைவன் போல வெள்ளை மாளிகையை நடத்துவதாக, ஜேம்ஸ் கோமே எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புத்தகம் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜேம்ஸ் கோமே பேட்டியளித்தார். அதில், அதிபர் டிரம்ப், ஆரோக்கியம் இல்லாதவர் என்றோ, மனநலம் சரியில்லாதவர் என்றோ கூற முடியாது என ஜேம்ஸ் கோமே தெரிவித்தார். ஆனால், டிரம்ப் ஒழுக்கமில்லாத நபர் என்று விமர்சித்த ஜேம்ஸ் கோமே, அவர் மரியாதைக்குரியவராக நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆனால் அவ்வாறு இருக்க அதிபர் டிரம்ப்-பால் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.