எமிரெட்ஸ் விமான நிறுவனம் இந்திய பைலட்டுகளுக்கு முன்னுரிமை! A-380 ரக இந்திய பைலட்டுகளின் எண்ணிக்கை உயர்வு!

துபாயின் எமிரெட்ஸ் விமான நிறுவனம்,விலைமதிப்பு மிக்க பயணிகள் விமானமாகக் கருதப்படும் A-380 ரக விமானங்களை இயக்கும் இந்திய பைலட்டுகளின் எண்ணிக்கையை  வெளியிட்டுள்ளது.

Image result for fly emirates india

தங்களிடம் 133 இந்திய விமானிகள் இருப்பதாகவும், திறன்வாய்ந்த இந்திய விமானிகள் 57 பேர் தங்களின் தலா 2 ஆயிரத்து 910 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக ஏ-380 ரக விமானங்களை இயக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அவர்களில் கேப்டன்களுக்கு சுமார் பத்தரை லட்சம் ரூபாயும், விமானிகளுக்கு சுமார் 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் சம்பளம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமான நிறுவனங்களிடம் ஏ-380 எனும் உயர் ரக விமானங்கள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், விலை மதிப்பு மிக்க பயணிகள் விமானத்தை இயக்குவதில் இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.