பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ ஜராக்ஸ் எடுத்து கொடுக்கும் தனியார் ஜராக்ஸ் கடைகள்….!!

வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, அரிசின் விதியை மீறி பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ ஜராக்ஸ் எடுத்து கொடுக்கும் தனியார் ஜராக்ஸ் கடைகள்.. தேர்வு துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், ஜராக்ஸ் கடையின் உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 10 பெண்கள் படுகாயம் …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரின் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து வேலை முடிந்து பெண்கள் ஒரு வேனில் காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளனர். அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் லாரி சாலையை கடக்க முயன்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், வேன் தலைகீழாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. … Read more

இந்தியா வந்தார் விராட் கோலியின் காதலி …!முத்தரப்பு டி20 தொடரில் விராட் கோலி மட்டை அவருக்காக(டேனி வியாட்) ஆடுமா…!

மகளிர் கிரிக்கெட்டில் கடந்த நவம்பரில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து மட்டும் அல்லாமல்  டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட், தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்  இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.இது குறித்து அவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு கூறியபோது, “நான் இப்போது விராட் கோலியின் பேட்டை பயன்படுத்துகிறேன்” என்றார். 2014-ல் இங்கிலாந்து … Read more

பீகாரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி; 17 பேர் கவலைக்கிடம்…

பீகார் மாநிலத்தில் உள்ள நாலந்தா பகுதியில் அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சுமார் 5 பேர் பலியாயினர். மேலும் இந்த விபத்தின் காரணமாக அங்கு பணியாற்றிய சுமார் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் சுமார் 17 பேர் நிலை மிக மோசமான நிலையில் உள்ளனர். குண்டுவெடிப்பில் ஏற்பட்டதில் பட்டாசு ஆலையில் அருகில் இருந்த ஐந்து வீடுகளும் சேதமடைந்தன.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து…!!

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது.உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்திய தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு அழைப்பு!

டிடிவி தினகரனுக்கு  மார்ச் 26ம் தேதி நேரில் வர  இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 3 வாரத்திற்குள் டிடிவி தினகரனுக்கு கட்சி பெயர் மற்றும் சின்னம் ஒதுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது தொடர்பாக ஆலோசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரஷ்யாவே முழுபொறுப்பு..!உளவுத்துறை அதிகாரி மீதான ரசாயனத் தாக்குதல் விவகாரம் …!

ஐரோப்பிய யூனியன்,பிரிட்டனில் ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரி மீதான ரசாயனத் தாக்குதலுக்கு ரஷ்யாவே முழுபொறுப்பு என  கூறியுள்ளது. பிரிட்டனுடன் ரகசிய தகவல்களை பகிர்ந்துகொண்டதாக சிறைத் தண்டனை வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ரஷ்ய முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் லண்டனில் வசித்து வருகிறார். ஸ்கிரிபால் அவரது மகள் யுலியா ஆகியோரை  ரசாயன விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடைபெற்ற நிலையில் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  இந்நிலையில் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற 28 நாடுகளின் கூட்டத்துக்குப் பின் பேசிய … Read more

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்வு…

தேனி மாவட்ட குரங்கணி காட்டுத்தீயில் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்பவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இதனால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கடும் அமளியால் மக்களவை 27ம் தேதி வரை ஒத்திவைப்பு !

மக்களவை  தொடர் அமளி காரணமாக 27ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரக்கோரி தெலுங்கு தேசம் அமளியில் ஈடுப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்களும் அமளியில் ஈடுப்பட்டனர். இதனைடுத்து மக்களவையில் செவ்வாய்கிழமை வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக  தெரிவித்துள்ளது.  வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மற்றும் திசை மாறுபாடு காரணமாக ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளதாகவும், இதே காரணத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 … Read more