நடிகர் அஜீத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ‘பில்லா படத்துக்குப் பிறகு மலேசியாவில் மிக பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மலேசியா அஜீத் நல்லெண்ண ரசிகர் மன்றம் என்ற பெயரில் மலேசியாவில் ரசிகர்கள் மன்றம் உள்ளது. இந்த மன்றத்தின் சார்பில் வருடா வருடம் அங்குள்ள இளைஞர்கள், புட்சால் என்கிற ஐவர் கலந்து கொள்ளும் போட்டி மக்களுக்கு நடத்தவுள்ளது. வரும் 21ம் தேதி நடக்கும் இந்தப் போட்டியில் 30 வயதுக்கு உள்ளவர்கள் பங்கு பெறலாம். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பல பரிசுகள் அறிவித்துள்ளனர்.

மலேசியாவில் உள்ள அஜீத் ரசிகர்கள் வருடா வருடம் புட்சால் என்ற விழிப்புணர்வு போட்டியை நடத்தி வருகின்றனர்.

வருடா வருடம் சமூக நலனுக்காக மலேசியா அஜீத் ரசிகர்கள் இது போன்ற போட்டியை உருவாக்கி மக்களுக்கு மட்டுமில்லாமல் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.