டிசிஎஸ்(TCS)-ன் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை,  நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான டாடா சன்ஸ் லிமிடெட், தனது மென்பொருள் நிறுவனமான, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி, டிசிஎஸ் பங்குகளை 2 ஆயிரத்து 872 ரூபாய் முதல், 2 ஆயிரத்து 925 ரூபாய் வரையில் விற்பனை செய்ய உள்ளது. டாடா சன்ஸ் குழுமம், அதன் வயர்லெஸ் பிரிவின் கடன்களை அடைக்க இந்த பங்கு விற்பனை வருமானத்தை பயன்படுத்த உள்ளது. டாடா டெலிசேவர் லிமிடெட், தனது மொபைல் போன் நிறுவனங்களை, கடந்த ஆண்டு, பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. நாட்டின் முதல் 5 முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் டிசிஎஸ்-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.