முதல்வர் பழனிச்சாமி  இனி அனுமதி பெற்றுதான் மலை மேல் ஏற முடியும். குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று  தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் சிக்கி கொண்டனர். 10 பேர் காயமின்றி வீடு திரும்பும் நிலையில் உள்ளனர். 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் 11 பேர், தேனியில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ ஏற்பட்டதன் காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படும். இனி அனுமதி பெற்றுதான் மலை மேல் ஏற முடியும்.

தீயை மலைப்பகுதியில் அணைப்பது சாதாரண விஷயம் அல்ல. விரைந்து அணைக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.