சுமார் 260 கோடி ரூபாய்க்கு உலகில் ஐந்தாவது மிகப்பெரிய வைரம்  ஏலம் போனது.

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் வைரக்கல்லை ஜெம் டைமண்ட்ஸ் என்ற நிறுவனம் கண்டெடுத்தது. 910 கேரட் மதிப்புள்ள இந்த வைரத்திற்கு Lesotho Legend என்று பெயரிடப்பட்டது. 2 கோல்ப் பந்துகளின் அளவுடைய வைரமானது, பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் ((Antwerp)) நகரில் ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் 260 கோடி ரூபாய்க்கு இந்த வைரத்தை ஒருவர் தனதாக்கினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.