தீவிரமாக நேபாளத்தில் தரை இறங்கும் போது  மோதி, தீப்பிடித்து எரிந்து சிதைந்து போன விமானத்தின் பாகங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காத்மண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் நேற்று தரை இறங்கிய BS 211 விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்தனர்.

உயிருடன் மீட்கப்பட்ட 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்தில் தற்போது விமான பாகங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விமான பாகங்கள் உதிரி உதிரியாக சிதைந்து போயிருப்பதால், விபத்து எந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்கும் என்பதை கண்முன் காட்டும் வகையில் மீட்புக் காட்சிகள் உள்ளன.மீட்புப் பணிகளை நேபாள பிரதமர் கேபி ஒலி(KP Oli) நேரில் பார்வையிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.