மலையேற்றத்திற்கு சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, ஏற்காட்டிலும் மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 60 அடி பாலம் பகுதியில் இருந்து, 6 கிலோ மீட்டர் தூரம் மலை ஏறி, ஏற்காட்டிற்கு செல்வது வழக்கம். இனி இந்த பாதையில் மலையேறுபவர்கள் செல்ல முடியாது. வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள மலைப்பாதையும் மூடப்பட்டுள்ளது. இதன்மூலம், அனுமதியின்றி அடர்ந்த காட்டுக்குள் யாரும் செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.