நடிகை ஹன்சிகா, ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துவிட்டார்

நடிகை ஹன்சிகா, இதுநாள் வரை தனக்கு சம்பளம் தரவில்லை என்று அவரது மேனேஜர் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார் ஹன்சிகா.

இந்நிலையில், முனுசாமி என்பவர் ஹன்சிகாவிடம் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். அவர் நடிகை ஹன்சிகா மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இதுவரை தான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா தரவில்லை என்றும், அதைப் பெற்றுத் தரும்படியும் கூறியுள்ளார் முனுசாமி