நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. அஜித் படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இதற்கிடையில் ‘வாலு’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட சிக்கலை தீர்க்க, நடிகர் விஜய் முன்வந்தார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார்.

விஜய்யின் தம்பியாக இருப்பதில் பெருமை கொள்வதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

அதில் பேசிய அவர், நான் மனதில் பட்டதை தைரியமாக சொல்லி விடுவேன். அதற்கு அஜித் தான் காரணம். அவரிடம் இருந்து தான் இதை கற்றுக் கொண்டேன்.

திரைத்துறையில் ரஜினியும், விஜய்யும் என்னை கவர்ந்தவர்கள். கடினமாக உழைத்து முன்னுக்கு வந்த, இவர்கள் தான் எனது முன்னோடி.

நான் கஷ்டப்பட்ட போது உதவ முன்வந்த, தமிழரான விஜய்யின் தம்பியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று சிம்பு தெரிவித்தார்.