நினைத்தாலே இனிக்கும் சர்க்கரை !

சர்க்கரை என்றாலே  நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இனிப்புதான்  என்று.அந்த அளவிற்கு சர்கரையின் பயன்பாடு உள்ளது. குளூகோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ் என்பவையும் சர்க்கரையே. பீட்ரூட்டிலும் மரவள்ளிக்கிழங்கிலும் சர்க்கரைச் சத்து அதிகம். நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் சென்று சர்க்கரைச் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தால் உட்கிரகிக்கப்படுகிறது. அதுதான் செல்களுக்கு நேரடியாகச் சென்று உடல் இயங்குவதற்கான ஆற்றலைக் கொடுக்கிறது. இந்த சர்க்கரை போதுமான அளவில் இருக்க வேண்டும். அதிகமானால் நீரிழிவு நோயாகிறது. அளவு குறைந்து … Read more

பட்ஜெட்டில் கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு!

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி  அறிக்கையில்  8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை அருண்ஜேட்லி அறிவித்தார். நாடு முழுவதும் கழிவறைகள் கட்ட ரூ.2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, வரும் நிதி ஆண்டில் 2 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு 5 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கப்படும் எனவும் அவர் … Read more

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபருக்கான வருமான வரியில் ஏமாற்றம் !

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிக்கையில்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என  அறிவித்துள்ளார். வருமான வரி குறித்து பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பல அறிவிப்புக்களை வெளியிட்டார். அதில். 8 கோடியே 20 லட்சம் பேர் நாடு முழுவதும் வருமான வரி செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். 85 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், வருமான வரி மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் … Read more

அமெரிக்க- இந்தியா இருதரப்பு உறவுக்கு வானமே எல்லை !

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுக்கு வானமே எல்லை என்று  கூறியுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா ((Navtej Singh Sarna))அளித்த விருந்தில் பங்கேற்றுப் பேசிய நிக்கி ஹாலே, பொருளாதார மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை பிரதமர் மோடி தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பாராட்டுத் தெரிவித்தார். இதேபோன்ற செயல்பாடுகளை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் நிர்வாகமும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, இரண்டு ஜனநாயகங்களும் இணைந்து பணியாற்றுவதற்கான பொது மதிப்பீடுகளை பெற்றிப்பதாகவும் … Read more

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அதிரடி! குடியரசுத் தலைவர், குடியரசுத் து. தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு ?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி  குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மாத ஊதியம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். மக்களவையில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, குடியரசுத் தலைவருக்கான மாத ஊதியம் 5 லட்ச ரூபாயாகவும், குடியரசுத் துணைத் தலைவருக்கான மாத ஊதியம் 4 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். பணவீக்கத்துக்குத் தக்கபடி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை ஐந்தாண்டுகளுக்கு … Read more

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பாஜக கட்சி பொதுத் தேர்தலுக்கு தயாரா?

பாஜக  தலைவர் அமித் ஷா ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பாஜக கட்சி பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில்  இதுதொடர்பாக ஆலோசனை நடத்த இரு மாநில பாஜக தலைவர்கள், பொதுச் செயலாளர்களை டெல்லி வரும்படி  அழைப்பு விடுத்துள்ளார் அமித்ஷா . அடுத்த ஆண்டு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளன. இதில் இரு மாநிலங்களிலும் யாருடன் கூட்டணி வைப்பது, மாநில கட்சிகளின் நிலைப்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள … Read more

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2018-19ம் நிதி ஆண்டில் விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடி!

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2018-19ம் நிதி ஆண்டில் நாடுமுழுவதும் விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில்  அறிவித்தார். 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் அறிவித்ததில் இருந்து ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி பேசி வருகிறார். அவர் பேசியதாவது- 2018-19ம் நிதிஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் இருக்கும். அடுத்த நிதியாண்டு … Read more

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு !

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைப் பதவியில் பெண்களை ஒருபோதும் அமர்த்தியதில்லை எனக் தெரிவித்துள்ளார். மேகாலய மாநிலம் சில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் கல்லூரியில் பெண்களிடையே பேசிய ராகுல்காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். அந்த அமைப்புத் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அதன் தலைமைப் பதவியில் ஒரு பெண்கூட இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தன்னுடைய இயக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்ததாகவும், அதேநேரத்தில் ஆர்எஸ்எஸ் … Read more

தூத்துக்குடியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு செய்து எரிக்க முயன்ற சிறுவன்!

தூத்துக்குடியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி செய்து செய்து, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து  சிறுவன் கொடூர செயல். தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டாப்பாறை கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தார். நேற்று இரவு சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றுவிட்ட நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் அலறிய சிறுமியின் கழுத்தை துண்டால் … Read more

ராஜஸ்தான் இடைத்தேர்தல் முன்னிலை விவரம் இதோ !

  ,மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸூம், ராஜஸ்தானில்  மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி  இரு மக்களவை தொகுதிகளிலும்   முன்னிலை வகிக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளுக்கு ஜனவரி 29ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் எதிர்கட்சியான காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் பாஜக முன்னணி வகிக்கிறது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் … Read more