'மெர்சல்' படத்திற்கு மீண்டும் கிடைத்த கௌரவம்.., நடந்தது என்ன…??

இப்படம் வெளியாகும் முன்பே பல இணையதள சாதனைகள் செய்து வந்த ‘மெர்சல்’ படம் 2017 இறுதியில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பல சிறப்புகள் இப்படத்திற்கு அமைந்தது. இதில் ஆளப்போறான் தமிழ்ன் பாடல் மிக முக்கியமானது. தற்போது மீண்டும் ஒரு பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. நார்வே நாட்டில் நடந்து வரும் தமிழ் படங்களுக்கான திரைவிழாவில் விருதுகள் கிடைத்துள்ளது. அதன் படி, மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக பாடலாசிரியர் விவேக்கிற்கு விருது கிடைத்துள்ளது. மேலும் நீதானே பாடலுக்காக ஸ்ரேயா … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் குறித்த கருத்துக்கணிப்பு

இன்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாளர்களுக்கான தேர்வில் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி உட்பட 11 பேர் வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த தேர்வில் மக்களாகிய உங்களது கருத்து என்னவென்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உங்களது விருப்பானது எதுவோ அதற்கு உங்களது வாக்கினை அளியுங்கள் 1.அபாரமான தேர்வு 2.சுமாரான தேர்வு 3.நல்ல தேர்வு இல்லை உங்கள் விடைகளை அளிக்க கிழே கமெண்ட் செய்யவும்……

மத்திய பட்ஜெட் 2018-ஆரம்ப சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வானது வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முடிகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2018-19ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் சுகாதாரத் துறையில் அதிகமான அறிவிப்புகளைக் கொண்டிருக்கும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பாக, ஆரம்ப சுகாதாரத்திற்கு முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்றும் சுகாதாரத்துறைக்கான … Read more

3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சமி வேகத்தால் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி…!!

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்கா 194 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி, 247 ரன்கள் எடுத்தது. … Read more

'விஜய் 62' படம் குறித்து எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-62’ படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் விஜய் 62வது படம் பற்றி பேசும்போது, “முருகதாஸ் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் கதையாக இருக்கும். இப்படமும் அப்படி ஒரு பிரச்சனை ஒரு பெரிய நடிகரை வைத்து பேசப்படுகிறது” என்று கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் போது 8 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட க்ருனால் பாண்டியா,சஞ்சு சாம்சன் விலை போகாத இங்கிலாந்தின் சாம் பில்லிங்க்ஸ்…!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு 11-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் மாலை 4மணிக்குமேல் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் கிழே. 1. டெல்லி … Read more

கௌதம் மேனன் தயாரிப்பில் உருவான 'மா' குறும்படம்…!!

கே.எம்.சார்ஜும் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தனது அம்மாவிற்காக அளிக்கும் குறும்படம் ‘மா’. இப்படம் வயது பருவத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. போராட்டங்கள், உலக கவர்ச்சிகள் என பல தடைகளுக்கு நடுவே பருவம் வந்த ஆண், பெண் ஒரு சிக்கலில் மாட்டி பின் அதை எப்படி அந்த பெண்ணின் தாய் சமாளிக்கிறாள். சமூகத்திற்கு என்ன சொல்கிறாள்..? என ‘மா’ சொல்கிறது. இதோ அந்த குறும்படம் https://www.youtube.com/watch?v=-lKk_5qYdkk

விஜய் ஆண்டனியின் 'காளி' ரிலீஸ் தேதி

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்துக்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியே இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசினை திருடன் என்று விமர்சித்த கமல் ஹாசன்…??

டாஸ்மாக் வியாபாரம் செய்யும் தமிழக அரசை திருடன் என்றும், “மது வியாபாரம் செய்வதற்கு அரசு என்று ஒன்று தேவையில்லை” என்றும் தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இடையே கமல்ஹாசன் பேசியுள்ளார். மேலும் தரமான கல்வி, குடிநீர் வசதி செய்து தருவதே அரசின் கடமைகள். சாதியாலும் மதத்தாலும் பிரிவினை ஏற்படுத்துவது தவறு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “சமூக மாற்றத்தை மாணவர்களால் தான் கொண்டு வரமுடியும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் தெரிந்து … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியானது மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இந்த டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேரலின் வெற்றி பெற்றுள்ளார். இவர் ருமேனியா நாட்டு வீராங்கனை சிமோனாவை 7-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் கேரலின் வென்றார்.