ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

  ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் ‘டிக் டிக் டிக்’ படத்தினை தொடர்ந்து, கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘அடங்க மறு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயம் ரவி போலீசாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது … Read more

சபரிமலை ஜயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறப்பு….!!

இன்று சபரிமலை ஜயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடையானது வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

சீல் வைக்கப்பட்ட மர்ம அறைகள் திறப்பு-போயஸ் கார்டன் இல்லத்தில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்…!!

  போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முதற்கட்டமான பணிகள் இன்று காலை 7.30 மணியிலிருந்து நடைபெற்று வந்தன.இப்பணியில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது, பூட்டப்பட்டிருந்த ஜெயலிலதா மற்றும் பூங்குன்றன் அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திறக்கப்பட்ட அந்த அறைகளில் … Read more

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப முடிவு…!

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தங்களுடைய மாணவர்களுக்குக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 1ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடமிருந்து 2017ல் மட்டும் SBI வங்கி ₹1771.77 கோடி அபராதமாக வசூலித்துள்ளது

குறைந்த பட்ச வைப்புத் தொகையை (Minimum balance Deposit) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து 2017ல் மட்டும் SBI வங்கி ₹1771.77 கோடி அபராதமாக வசூலித்துள்ளது. ஆனால் பணக்கார நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியாத வாராக்கடன் தொகைகளை இதுபோல ஏழை மற்றும் குறைந்த வருவாய்க்காரர்களிடமிருந்து வசூலித்து பா.ஜ.க. அரசு நிதிச் சுமையை சமாளிக்கிறது.

வேலைக்காரன் வீடியோ விமர்சனம் : வீடியோ உள்ளே

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் வேலைக்காரன்.

இப்படம் கமர்சியலாக மட்டுமல்லாது, பொது மக்களுக்கு நல்ல கருத்துகளையும் தாங்கி நிற்கிறது. இதனால் இந்த படம் பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது வீடியோ வடிவில் காண்க

source : dinasuvadu.com

ரோபோ முலம் காவல் பணியை தொடங்கிய ஹைதராபாத்!!

உலகில்ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக தெலுங்கான மாநிலம்  ஹைதராபாத்தில் புதிய ரோபோ ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசின் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலா் ஜெயேஷ் ரஞ்சன் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினாா்.ஹெச்-பாட்ஸ் என்ற நிறுவனம் இதனை தயார்செய்துள்ளது. பேபட்டா வொ்ஷனில் இந்த ரோபோ மனித உருவில்உருவக்கப்பட்டுள்ளது.காவல் பணியை செய்யவும்,மனிதர்களை அடையாளம் காணவும்,புகார்களை பெறவும் இந்த ரோபோவால் முடியும். ரோபோவின் விலை 5 லட்சம் ரூபாய் என்றும், இந்த ரோபால் 360 டிகிாி கோணங்களிலும் திரும்பி … Read more

2017-இல் ட்ரெண்டிங்கான சில சம்பவங்கள் பிக் பாஸ் முதல் மெர்சல் வரை

2017ஆம் ஆண்டு எந்தாண்டும் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் பரபரப்பாக சென்றது. அவ்வாறு ட்ரெண்டிங்கில் நம்முன் வந்து சென்ற சில சம்பவங்கள் பிக் பாஸ் சின்னத்திரையில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. பிக் பாஸ் ஓவியாவிற்காக ஓவியா ஆர்மி என்றெல்லாம் தொடங்கி அவருக்கு வாக்குகளை வாரி வழங்கினர். இந்த நிகழ்ச்சி நமக்கு தெரியாத பலரை அறிமுகபடுத்தி பிரபலமாக்கியது. ஜிமிக்கி கம்மல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ஓரளவு ஓடிய படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இப்படம் தோல்வி … Read more

புத்தாண்டை பலத்த பாதுகாப்புடன் வரவேற்கும் லண்டன் நகரம்

புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் கொண்டாட்டத்துடன் மக்கள் தயாராகி வருகின்றனர். அதிலும் வருடாவருடம் லண்டனில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அதே போல் இந்தாண்டும் கொண்டாட்டத்திற்கு லண்டன் தயாராகி வருகிறது. ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்ப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்தாண்டு அதிகமாக எடுக்கபட்டு வருகிறது. source : dinasuvadu.com

புதிய பேரவை தொடங்கும் திட்டத்தில் டி.டி.வி.தினகரன்

அதிமுகவிலிருந்து தனது ஆதராவாளர்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டு வருவதால், தினகரன் அணி தனியாக பேரவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தினகரன் அணி தனது ஆதராவளர்களுடன் இணைந்து புதிய பேரவை தொடங்கி நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு பதவியும் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். source : dinasuvadu.com