தனுசு ராசி நேயர்களே ! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…

தனுசு ராசி நேயர்களே ! சதாசர்வ காலமும் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள், போராட்டங்களை ரசித்து வாழக்கூடிய மனசுடையவர்களே! செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இந்த 2018-ம் ஆண்டு முழுக்கவே சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாக தொடர்வதால் வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது … Read more

மகர ராசி நேயர்களே! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….

மகர ராசி நேயர்களே! கடல்போல் விரிந்த மனசும் கலகலப்பாகப் பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்களே! இந்த 2018-ம் வருடம் சந்திரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜிதப் புத்தியாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். கடன் பிரச்சினையில் ஒரு பகுதி தீரும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 10-ம் … Read more

விருச்சக ராசி நேயர்களே !2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…

விருச்சக ராசி நேயர்களே ! தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுபவர்களே! உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும். வருடம் முடியும்வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதிக் கட்டமான பாதச் சனி தொடர்வதால் எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் … Read more

69 மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்க பட்டனர் : இன்று காரைக்கால் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்

இலங்கை கடற்படைகளால் தமிழக மீனவர்கள் பலர் துன்புறுத்த படுகின்றனர். அவ்வபோது, அவர்கள் கைது செய்யபடுவதும் பிறகு விடுவிக்க படுவதும். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 69 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 28,29ஆம் தேதிகளில் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைவரும் இன்று காரைக்கால் கடலில் வந்து சேர்ந்தனர். source : dinasuvadu.com

மீன ராசி நேயர்களே!2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…

மீன ராசி நேயர்களே! விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! முயற்சி ஸ்தானமான 3-வது ராசியில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 8-ம் வீட்டில் நிற்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். … Read more

கன்னி ராசி நேயர்களே!2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….

கன்னி ராசி நேயர்களே! எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். வி.ஐ.பிக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாருக்கு இருந்து வந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 2-ம் வீட்டில் … Read more

கடக ராசி நேயர்களே! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…

கடக ராசி நேயர்களே! இடம், பொருள், ஏவல் தெரிந்து, இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும். சூரியன் 6-ம் … Read more

மிதுன ராசி நேயர்களே! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்

மிதுன ராசி நேயர்களே! மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்களே! உங்களுடைய ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் உண்டு. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற … Read more

ரிஷப ராசி நேயர்களே !2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….

ரிஷப ராசி நேயர்களே ! எறும்புபோல் அயராது உழைத்து, தேனீபோல் சேமிக்கும் இயல்பு உடையவர்களே! புதன் உங்களுடைய ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். உறவினர்கள் உங்களுடைய பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். நட்பு வட்டம் விரிவடையும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 3-ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தைரியம் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். வழக்கு சாதகமாகும். தெலுங்கு, இந்தி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். … Read more

மேஷ ராசி நேயர்களே !2018 ஆங்கில புத்தாண்டு பொதுப்பலன்கள்….

மேஷ ராசி நேயர்களே ! அனைவரிடமும்  கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீடான தனஸ்தானத்தில் இந்த 2018 புத்தாண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சனி பகவான் இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்திலேயே தொடர்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். … Read more