ஓகி புயல் காரணமாக சுமார் 50 ஆயிரம் வாழைகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கலுன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை தேவைகள் கூட மிகவும் பாதிக்கபட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டது. தற்போது இவை ஓகி புயல் காரணமாக அனைத்தும் சரிந்துள்ளது. சுமார் 50ஆயிரம் வாழைகள் புயலால் சேதமடைந்துள்ளன.

கடல்சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல்சீற்றத்தின் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாகவும் கடல் சீற்றத்தின் காரணமாகவும் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகளின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரியும், அப்பகுதியில் துண்டில் வளைவு ஏற்படுத்தி தரவும்  கடற்கரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தவறை ஒப்புக்கொண்ட அஜித் இப்படி பட்டவரா இவர்

அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் விட்டதை அடுத்த படத்தில் கண்டிப்பாக பிடிக்கவேண்டும் என்று அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இது எதிர்பாராத சில விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் ரூ 30 கோடி அளவில் நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இது குறித்து தயாரிப்பு தரப்பு அஜித்திடம் சொல்ல. அவர் சிவா மீது தவறல்ல. நான் தான் அப்படி எடுக்க சொன்னேன். நான் சொன்னதை அவர் செய்திருக்கிறார் என்று கூறி தன் … Read more

கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக மதுரை,நெல்லை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி  4 மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!

வெள்ளதில் சிக்கிய அரசு பேருந்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

நெல்லை: செங்கோட்டை அரிகராநதி ஆற்றுப்பாலத்தில் வெள்ளப்பெருக்கில் அரசுப்பேருந்து சிக்கியது; ஆற்றுப்பாலத்தில் வந்தபோது சிக்கிய பேருந்தில் இருந்து கிராம மக்கள் உதவியுடன் 40 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

விலகிச் சென்றது ஓகி புயல்

கன்னியாகுமரியை அச்சுறுத்துக் கொண்டிருந்த ஒகி புயல் விலகிச் சென்றது திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 23 கி.மீ தொலைவில் தற்போது ஓகி புயல் மையம் கொண்டுள்ளது – இந்திய வானிலை மையம் #OckhiCyclone #Kanyakumari #PTControlRoom

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு