பேரறிவாளன்,சாந்தன்,நளினி விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் நளினி,சாந்தன், முருகன், பேரறிவாளன், மற்றும் பத்தாண்டுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைவரையும் 70வது சுதந்திரத்தை முன்னிட்டும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லை ஜவகர் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமஜக சார்பில் தாமஸ், ஜமால், சாந்தி ஜாபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லையில் மாந்திரீகவாதி குத்திக்கொலை

நெல்லையில் மாந்திரீகவாதி குத்திக்கொலை செய்யப்பட்டார்.திருநெல்வேலி, மேலச்செவலை சேர்ந்த சண்முகவேல் மகன் சுந்தரராஜ் 36.தற்போது ரெட்டியார்பட்டியில் மனைவி கல்யாணி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.நாட்டு வைத்திய தொழிலில் ஈடுபட்டு வந்தார்.செய்வினை நீக்குவது, மாந்திரீக வேலைகளிலும்ஈடுபட்டுவந்தாராம். இவர் வசித்த பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இருவர் இறந்துள்ளனர்.அவர்களது இறப்பிற்கு சுந்தரராஜின் செய்வினைதான் காரணம் என சந்தேகப்பட்டனர். அவரை அந்த வீட்டில்இருந்து காலி செய்யுமாறு சிலர் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலையில் ரெட்டியார்பட்டியில்இருந்து நான்குவழிச்சாலைக்கு செல்லும் பாதையில் கத்தியால் குத்தி … Read more

தமிழர் உரிமை மாநாடு:நெல்லையில் ஆக.,19ல் நடக்கிறது

நெல்லையில் தென்மண்டல தமிழர் உரிமை மாநாடு வரும் ஆக.,19ல் நடக்கிறது.மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியும் மொழி உரிமைகளை நிலைநாட்டிட கோரியும்நெல்லையில் தமிழர் உரிமை மாநாடு நெல்லையில் ஆகஸ்ட் 19ல் ஜவஹர் திடலில் நடக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சசார்பில் நடக்கிறது.கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளை முறையாக நடத்தி தொன்மையை வெளிக்கொணர … Read more

இனி குறைவாக ரீசார்ஜ் செய்யலாம். அதிகமாக பேசலாம்.மொபைல் கட்டணம் அதிரடியாக குறைகிறது!!

செல்போன் கால் கட்டணம், டேட்டா கட்டணம் விரைவில் அதிரடியாக குறைக்கப்பட உள்ளது. செல்போன் நிறுவனங்களுக்கு இடையே இணைப்புக்கட்டணத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) குறைக்க உள்ளதால் இந்த கட்டணம் குறைய உள்ளது. தற்போது, நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்புக்கட்டணம்(ஐ.யு.சி.) ஒரு அழைப்புக்கு 14 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதை நிமிடத்துக்கு 10 காசுகளாக குறைக்க டிராய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்புக்கட்டணம் என்பது விவாதப்பொருளாக மாறிவிட்டது. ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ஐ.யு.சி. கட்டணத்தை அதிகப்படுத்தி … Read more

உ பியில் ஆக்சிஸன் அல்ல வந்தே மாதரமே கட்டாயம்..!

மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ள உ பி யில் மனிதர்களுக்கு ஆக்சிஸன் இல்லை என்பதை அறிந்தோம். பாஜக வின் அந்த கேடுகெட்ட ஆட்சி தனது தோல்விகளை மறைக்க மதவெறியையே நம்பியுள்ளது. அங்குள்ள மதராசாக்கள் சுதந்திரதினத்தன்று வந்தே மாதரம் பாடலைப் பாடவேண்டும், அதை வீடியோ எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று (தினமணி) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏகக் கடவுளுக்கு இணை வைக்ககூடாது, அவரைத்தவிர வேறு எதையும் வணங்கக் கூடாது என்பது இஸ்லாமின் அடிப்படை இறையியல். அதற்கு விரோதமாக நாட்டை இந்து … Read more

தி ரியல் ஹீரோ அஹமது கஃபீல்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையருக்கு பணம் கொடுக்காததால் 66 பச்சிளம் குழந்தைகள் அநியாயமான முறையில் இறந்துபோன சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் மேலும் பல குழந்தைகளின் உயிர் போகாமல் இருக்க காரணமான டாக்டர் அஹமது கஃபீலை இந்நேரம் நன்றியுடன் நினைவு கூறவும் கடமைப்பட்டுள்ளோம். மருத்துவமனையில் அடுத்தடுத்து 66 குழந்தைகள் உயிர் பிரிந்ததும் உடனடியாக மருத்துவர் ஆக்ஸிஜன் சப்ளையரை தொடர்பு கொண்டுள்ளார்.அரசாங்கம் நிலுவை பணத்தை கொடுத்தால் மட்டுமே ஆக்ஸிஜன் சிலிண்டரை தருவோம் என … Read more

கம்பியில் மாட்டிக்கொண்ட குட்டி… இணையத்தில் வைராலகும் வீடியோ

தாயின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குரங்கு குட்டி ஒன்று அங்குள்ள கம்பி ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளது. இதன்போது தாய் குரங்கு தனது குட்டியினை பாதுகாக்க நடத்திய போராட்டமும், இறுதியில் அதன் வெற்றியும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.