பரணி மாதிரி ஜீலியும் எஸ்கேப் ஆகட்டும்… சினேகனின் சதி யோசனை

சென்னை : பரணி மாதிரி ஜீலியும் பிக்பாஸ் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகட்டும் என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். காரணம் ஓவியாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஓவியாவுக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது, மற்றவர்கள் புறக்கணிக்க படுகிறார்கள் எனவும், அதை மாற்ற கவிஞர் சினேகன் ஒரு யோசனை தெரிவித்துள்ளார். என்ன தெரியுங்களா. காயத்ரியிடம் பேசிக்கொண்டிருந்த சினேகன் இது பற்றி கூறியிருப்பதாவது “ஓவியா செய்யும் பிரச்னைகள் போல தினமும் நாமும் ஏதாவது செய்வோம். இன்னைக்கு ரைசாவை … Read more

சப்ப பௌலர்களிடம் தனது வீரத்தை காட்டும் விராட் கோஹ்லியை சச்சின்,டிராவிட் போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிட வேண்டாம்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூஷப்…!

இஸ்லாமாபாத்: சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லியை ஒப்பிட்டுப் பேசமுடியாது என்று பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் கூறியுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘ நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்த போது, மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகள் மிகவும் கடினமானதாக/வலுவானதாக இருந்தன. எங்கள் எதிர் அணிகள் அதிக பலத்துடன் இருப்பர். அவர்களுடன் … Read more

மணப்பாறையில் பள்ளி மாணவிகள் உயிரிழப்பு.தலைமையாசிரியரிடம் போலீஸ் விசாரணை…

திருச்சி : திருச்சி மணப்பாறையில் பள்ளி மாணவிகள் உயிரிழந்தது தொடர்பாக மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவிகள் செல்வி, ரதிதேவியின் சடலம் ரயில்வே கேட் அருகே மீட்கப்பட்டது. செல்வி, ரதிதேவி ஆகிய மாணவிகள் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார் கொலையின் பின்னணி என்பதையும் விசாரித்து கொண்டும்,விசாரணை நடத்தி வருகின்றனர். 

2வது டெஸ்ட் வலுவானநிலையில் இந்தியா…334/3..புஜாரா மற்றும் ரஹானே சதம்…!

கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கொழும்புவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையை எட்டியுள்ளது. இரண்டாவது டெஸ்டில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராகுலும் தவனும் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடினார்கள். இதனால் இந்திய அணி 52 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. முதல் டெஸ்ட் போல இங்கும் வேகமாக ரன்களை அடிக்க முயன்ற தவன், … Read more

“ஸ்கெட்ச்” குத்து பாடலில் சியான் விக்ரமின் நடன புகைப்படும் இதோ…!

சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” படத்தின் குத்து பாடல் ஒன்றின் புகைப்படத்தை யாரோ ரசிகர் ஒருவர் எடுத்து இப்போது அதனை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் சியான் விக்ரமின் ரசிகர்கள்….. அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக… இந்த பாடல் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் நடனக்காட்சிகள் அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன் அர்ஜுனா விருது!!!

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவிற்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து முதல்பரிசான தங்க பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பத்ம விருது வழங்க விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், … Read more

விஜயபாஸ்கருக்கு மீண்டும் வருமானவரித்துறை சம்மன்!!

கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும். இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியொரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதையடுத்து இதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் … Read more

P.hd படிக்க பூஜ்யம் மதிப்பெண் எடுத்தால் போதும் : டெல்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு ..!

டில்லி பல்கலைக்கழக கணிதத்துறை பி எச் டி படிப்புக்கு சேர தாழ்த்தப்ப்ட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான குறைந்த பட்ச மதிப்பெண் பூஜ்ஜியம் என கணிதத்துறை அறிவித்துள்ளது. டில்லி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பி எச்டி படிப்புக்கான நேர்க்காணல் மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்ணை அறிவித்துளது. இதில் குறைந்த பட்ச தேவையான மதிப்பெண்ணாக இடஒதுக்கீடு இல்லாத மாணவர்களுக்கு 94% எனவும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 84% எனவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 0% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 223 பேருக்கான நேர்க்காணல் வரும் ஆகஸ்ட் … Read more

தூத்துக்குடி பனிமய மாதாவை வணங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்….!

தூத்துக்குடி:தமிழகத்தில் தற்போது தமிழ்நாடு 2௦ ஓவர் உள்ளூர் கிரிக்கெட் தொடர்(TNPL) நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை காணவும்,மேலும் அவர் அந்த தொடரில் வர்ணனையாளராகவும் இருக்கும் நியுசிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான கிறிஸ் ஸ்டைரிஸ் தூத்துக்குடி பனிமய மாதா கோவிலுக்கு வந்து வழிபட்டுவிட்டு சென்றார்.

திருச்செந்தூரில் குடிநீர் கேட்டு DYFIயுடன் பெண்களும் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்…!

DYFI சார்பில் ஆர்ப்பாட்டம்: தூத்துக்குடி: திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள தோப்பூரில் சுமார் ஒரு மாதமாக குடிநீர் வராமல் இருந்து வந்துள்ளது. இதனை கேள்விபட்டவுடன் அந்த பகுதிக்கு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளரும், ஒன்றிய செயலாளருமான நந்த குமார்,அந்த பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசி பின்பு மக்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து குடிநீர் வசதி உடனடியாக செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த … Read more