யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!!

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை கடந்த வாரம் மர்மநபர்கள் சிலர் கொலை செய்ய முயன்றனர். இந்தச் சம்பவத்தில் இளஞ்செழியன் அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய போதிலும், அவரது பாதுகாப்பு அதிகாரி பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்பு பணியாற்றி வந்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை முயற்சிக்கு உள்ளான நீதிபதி ஒரு … Read more

உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் திறப்பு…,

 யோரப் என்றழைக்கப்படும் இந்த பாலம், 278 அடி உயரத்தில், 1,620 அடி நீளம் மற்றும் 2 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் விஸ்ப் மாவட்டத்தில் உள்ள, ராண்டாவின் ஜெர்மேட் மற்றும் கிரேசேன் என்ற இரு மலைகளை இணைக்கும் வகையில், இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. தரையில் இருந்து சுமார் 85 மீட்டர் உயரத்தில் அமைக்‍கப்பட்டுள்ள இந்த பாலம், கடினமான அதிர்வுகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடக்கும் போது, பாலம் ஆடாமல் இருக்க, 8 … Read more

ரூ.80 லட்சத்துக்கு ஏலம் போன விஞ்ஞானியின் புகைப்படம்..,

அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னுடைய நாக்கை நீட்டி போஸ் கொடுக்கும் அந்த பிரபல புகைப்படம் ரூ.80 லட்சத்துக்கு(1,25,000 டாலர்கள்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. நவீன கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1951-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இரவு நண்பர்களும் உடன் தன்னுடைய 72வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இரவு முழுவதும் நடைபெற்ற அந்த கொண்டாட்ட நிகழ்வில் புகைப்பட கலைஞர்கள் தொடர்ந்து பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில் நண்பர்களுடன் ஐன்ஸ்டீன் … Read more

மருத்துவ மாணவர்களுக்கான 85% ரத்து…தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் மருத்துவர்கள் கருத்து…!

மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கான 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்டப் பாதுகாப்புடன் கூடிய நிரந்தரத் தீர்வை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலச் செயலர் டாக்டர் பாலகிருஷ்ணன்: முதுநிலை மாணவர் சேர்க்கையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றது போன்று, இந்த விவகாரத்திலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். … Read more

விவேகம் ரிலீசாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியானது.!

அஜித்தின் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள விவேகம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டார் இயக்குனா் சிவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகா்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலா் நடித்துள்ள படம் விவேகம். பெரும்பான்மையான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் 10-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அனைவராலும் எதிா்பாா்க்கப்பட்டது. வேதாளம் படம் திரைக்கு வந்து சற்று காலம் ஆகிவிட்ட நிலையில் அஜித்தின் ரசிகா்கள் … Read more

மாற்று திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபிக்கலாம்…!

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.இதில் 10-ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ. 8,465 முதல் ரூ. 46,000 வரையிலும், 11, 12 மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு (டிப்ளமா, பிஏ, பிஎஸ்சி, பி காம், மருத்துவக் கல்வி, … Read more

50 ஆண்டுகளுக்கு பின்பு கண்டெடுக்கப்பட்ட இந்திய பெண் பயணியின் கை!!!

பெர்லின், ஆக.1 ஆல்ப்ஸ் மலையில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கை, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணியுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.விமான விபத்துக்கள் நடந்த இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி, தடயங்களைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேனியல் ரோச்சி, ஆல்ப்ஸ் பனி மலைப் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில், சிதைந்த நிலையில் ஒரு கை, ஒரு கால் என 2 மனித உறுப்புகளையும், … Read more

Pro Kabaddi League: ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை தோற்கடித்தது யு மும்பா

ஹைதராபாத்: 5-வது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 5-வது ஆட்டத்தில் யு-மும்பா அணி 29-28 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியைப் பரபரப்பாக வென்றுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் யு மும்பா அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இரு அணிகளும் தங்கள் ரைடின் மூலம் புள்ளிகளைப் பெற்றது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகரிக்க வைத்தது. யு மும்பா வீரர் … Read more

சிக்ஸ் பேக் வைப்பதற்கு கடினமாக உடற்பயிற்சி செய்யும் விஜய் சேதுபதி…!

சமீபத்தில் திரைக்கு வந்த ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவி மலை வாழ் மக்களில் ஒருவராகவும், ‘கடம்பன்’ படத்தில் ஆர்யா மலைவாசியாகவும் நடித்து இருந்தார்கள். இவர்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும் மலைவாழ் இளைஞராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர், ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.’ இதில் விஜய் சேதுபதி, பழங்குடி மக்களின் தலைவராக வருகிறார்.இதற்காக விஜய் சேதுபதி தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். தினமும் உடற்பயிற்சி செய்து இதுவரை பார்த்திராத விஜய் சேதுபதியாக மாறியிருக்கிறார்!

ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் -காலா மற்றும் மெர்சல் படப்பிடிப்பு நிறுத்திவைப்பு!

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையில் பல வருடங்களாகவே பஞ்சாயத்து.தொழிலாளர்கள் ஊதியம் சம்பந்தமாகத்தான். அவ்வப்போது இது தொடர்பாக பிரச்சனைகள் எழுவதும், பிறகு அடங்கிப்போவதுமாக இருந்து வந்த இந்த விவகாரம் அண்மையில் பூதாகரமாக வெடித்திருக்கிறது. நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு உதவிய ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் பில்லா பாண்டி படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் இதானால் காலா மற்றும் மெர்சல் படப்பிடிப்பு நிறுத்திவைக்கபட்டுள்ளது.இதானால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுள்ளது . அதே வேளையில் அநியாயமான … Read more