பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?… இந்தியாவில் யாரெல்லாம் சிக்குவார்கள்?

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு’ (ஐ.சி.ஐ.ஜே) இந்த பனாமா ரகசிய ஆவணங்களை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வராத்தில் வெளியிட்டது. பனாமா ரகிசய ஆவணங்கள் முழுமையும் ஒருவர் தனது நாட்டை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் விவரம், முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம், குற்றங்களை, தீவிரவாதத்தை வளர்க்க பயன்படுத்தப்பட்ட விதம், நாடுகளை எப்படி சுரண்டிச் சேர்க்கப்பட்டது என்பதை விளக்குபவையாக இருக்கும். வெளிநாடுகளில் தொடங்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சட்டவிரோதமான சொத்துக்களால் … Read more

நீட் விவகாரத்தில் தமிழக அரசு கபட நாடகம்:மு.க.ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு போராட்டம் நடத்தி கைதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணனை திமுக செயல் தலைவர் சந்தித்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, ராமக்கிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அதிமுக அணிகள் இரண்டும் சர்க்கஸ் கூடாரம். நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக தமிழக அரசு கூறுவது கபட நாடகம். இந்த விவகாரத்தில் தமிழக மாணவர்களை பற்றி மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு … Read more

பெண் மர்ம மரணம்: கணவர் உள்பட 3 பேரை காவல் துறையினர் விசாரணை!

மன்னார்குடி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உள்பட 3 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலையை சேர்ந்த முத்தழகன் மகன் இளஞ்சேரன் (வயது 32). இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டர்கடராக பணியாற்றி வருகிறார். இளஞ்சேரனுக்கும் மன்னார்குடியை அடுத்த சேரன் குளம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தியேன் என்பவர் மகள் திவ்யா … Read more

உதவிக் கேட்ட சிறுமியை இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநர்!

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில்தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இளம்பெண்ணை இரக்கமற்ற முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய நபர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய இருவருக்கும் இங்கிலாந்து போலீசார் வலைவீசியுள்ளனர். இரவு 7 மணியளவில் வில்லா பூங்கா அருகேயுள்ள விட்டான் ரயில் நிலையம் சென்ற 15 வயது இளம்பெண்ணை அங்கிருந்து ஒதுக்குப்புறத்திற்கு இழுத்துச் சென்ற இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ரயில்நிலையத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த … Read more

கூகிள் ப்ளேவுடன் இணையும் யூ டியூப் ரெட்!

யூ டியூபின் சந்தா சேவையான  `யூ டியூப் ரெட்` தனது புதிய சேவையை வழங்குவதற்காக கூகிள் ப்ளே -வுடன் இணையவுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கொரியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் உள்ளது போல `யூ டியூப் ரெட்` -னை கூகுளுடன் இணைக்க உள்ளதாக யூ டியூபின் உலகளாவிய தலைவர் லயர் கோஹென் தெரிவித்துள்ளார். இணைப்பிற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்த நிலையில், இரண்டு ஸ்ட்ரீமிங் சேவைகளிலும் பணிபுரியும் குழுக்களை தற்போது இணைத்துள்ளன. கூகுளின்ஸ்ட்ரீ மிங் சேவைகளான ‘கூகிள் மியூசிக்‘மற்றும் … Read more

தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக ‘கக்கூஸ்’ ஆவணப் பட இயக்குநர் திவ்யா பாரதி தெரிவித்துள்ளார்.

மதுரை:ஆவணப் பட இயக்குநர் திவ்யா பாரதி, கடந்த வருடம் ‘கக்கூஸ்’ என்ற ஆவணப் படம் எடுத்திருந்தார். அந்தப் படம், மலம் அள்ளும் தொழிலாளர்களின் வேதனைகளையும் கஷ்டங்களையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. அந்தப் படத்திற்கான ட்ரைலர் இணையத்தில் வெளியானவுடனேயே அந்த ஆவணப் படத்தை வெளியிடக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த வருடத்தில் தொடக்கத்தில் ‘கக்கூஸ்’ படம் வெளியானது. இந்த நிலையில், 2009-ம் ஆண்டில் திவ்யா பாரதி மாணவியாக இருக்கும்போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கிற்காக, அவரை … Read more

சம்பளத்தை கல்வித்துறைக்கு நன்கொடையாக அளித்த டிரம்ப்

அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வித்துறைக்கு நன்கொடையாக தந்துள்ளார். அமெரிக்க குடியரசுத் தலைவராக தான் வெற்றிபெற்றால், சம்பளம் வாங்கபோவதில்லை என்று தெரிவித்திருந்தார் டிரம்ப்.அமெரிக்க சட்டத்தின்படி. குடியரசுத் தலைவர் சம்பளம் வாங்க வேண்டும் என்பதால், தனக்கு வரும் சம்பளத்தை சமூக பணிகளுக்கு வழங்குவதாக டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். தான் கூறியதை நிறைவேற்றும் விதமாக, அவர் பதவி ஏற்ற பிறகு, அவருக்கு கிடைத்த முதல் காலாண்டு சம்பளத்தை, தேசிய … Read more

தினகரன், திவாகரன் சேர்ந்துட்டாங்க… இனி ஓபிஎஸ் தனி மரம்- சம்பத் ஆவேசம்!

சென்னை : அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், பொதுச்செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரனும் இணைந்திருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியில் இருந்து அனைவரும் சென்று விடுவார்கள். ஓபிஎஸ் தனிமரமாவார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சசிகலாவின் அண்ணன் மனைவி சந்தானலட்சமி நேற்று உயிரிழந்தார். இதற்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா இறந்ததையடுத்து கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் டிடிவி. தினகரனும், சசிகலாவின் … Read more

பொன்னாங்கண்ணி கிரை உடலுக்கு நல்லதா?

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். பொன்னாங்கண்ணி, புளிச்ச கீரை, செவ்வாழை ஆகியவற்றை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கி, உடலுக்கு பலம் தரும் மருந்துகள் குறித்து பார்க்கலாம். சிவப்பு பொன்னாங்கண்ணி பல்வேறு நன்மைகளை கொண்டது. உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதுடன் தோலுக்கு மினுமினுப்பை கொடுக்கிறது. … Read more

இந்தியா- இலங்கை அணிகளுக்கு முதல் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு!

காலே: இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கபப்ட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் எடுத்த நிலையில் காலேவில் மழை பெய்து வருகிறது.