GST வரியை கண்டித்து சுமார் 10000 தொழிலாளர்கள் பங்கேற்ற போராட்டம்…!

திருநெல்வேலி:பீடித் தொழிலை அழிக்கும் மோடி அரசின் 28% GST வரி விதிப்பை கண்டித்து நெல்லையில், திரண்டு வந்த சுமார் 10000 பெண்கள் வெள்ளம் போல வந்து கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். பட்டாசு, தீப்பெட்டி, கடலை மிட்டாயை தொடர்ந்து பிடி தொழிலும் தெருவில் இறங்கி இப்போது போராட முன்வந்துள்ளனர்.இப்போராட்டத்தை சிஐடியு மாநில துணைத்தலைவர் கருமலையான் மற்றும் சிஐடியு மாநில செயலாளரும்,தூத்துக்குடி துறைமுக டிரஸ்ட்டியுமான ரசல் ஆகியோர் தலைமையேற்று நடத்தனர்.

பிரதமரின் நீலப்புரட்சி திட்டத்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்படும்:அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: பிரதமரின் நீலப்புரட்சி திட்டத்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்படும் என்று  தெரிவித்தார். சென்னையில் இன்று அவர் கூறுகையில், பிரதமரின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 படகுகள் வழங்கப்படும். 3 ஆண்டுகளில் 2,000 படகுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நீலப்புரட்சி திட்டத்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்படும். கச்சத்தீவை மீட்பது தமிழக அரசின் உறுதியான கொள்கை, அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதே அரசின் நிலைப்பாடு. இவ்வாறு … Read more

மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் கைது:காவல் துறை எச்சரிக்கை!!!

மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட கட்சிகள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டம் சீர்குலைந்து என்று போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிடபட்ட ஒடிசாவின் வீலர் தீவு…!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசாவின் வீலர் தீவுக்கு  ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவு என பெயரிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர்  மற்றும் அணு விஞ்ஞானியான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 2வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசாவில் உள்ள வீலர் தீவுக்கு அவரது பெயரை சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது என முதல்வர் நவீன்பட்நாயக் தெரிவித்தார்.

கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது வழங்கும் குழுவில் உறுபினர்களாக வீரேந்திர சேவாக், பி.டி.உஷா …

சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் வழங்கும் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது வழங்கும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை இரண்டுமே, விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் மிகப்பெரிய விருதுகள். இந்த விருதுகளுக்கு தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டுபிடிப்பது விருது குழுவின் தலையாய பணியாகும்.

தரமணி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்:இயக்குநர் ராம் விளக்கம்!

‘தரமணி’ திரைப்படத்தில் கதாநாயகி மது அருந்துவது மற்றும் புகைப்பது உள்ளிட்ட பல கட்சிகளை நீக்கவேண்டும் அல்லது ஏ சான்றிதழ் (A- Adults only, 18 வயதிற்கு அதிகமானவர்கள் மட்டும் ) வழங்கப்படும் என்று தணிக்கை குழு கூறியபோது, ஏ சான்றிதழை தான்கேட்டு பெற்றதாக அத்திரைப்பட இயக்குநர் ராம் தெரிவித்தார். ஏ சான்றிதழ் பெற்றால் என்ன? ஐ டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நிஜத்தில் நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளதாக கூறும் … Read more

இலங்கை அணி:154/5 ரன் எடுத்து தடுமாற்றம்!

முதல் டெஸ்டில் இரண்டாம் நாளான இன்று  இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறுகிறது.  ரகானே மற்றும் ஹர்திக் பாண்ட்யா அரை சதம்:  இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது. புஜாரா 153 ரன்கள் எடுத்தார். ரகானே (57) அரை சதம் கடந்தார். ஹெராத் ‘சுழலில்’ சகா (16) சிக்கினார். அஷ்வின் 47 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 15, ஷமி 30 ரன்களில் ‘பெவிலியன்’ திரும்பினர். அறிமுக டெஸ்டில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். … Read more

கீழடி 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் நகர நாகரிகம்:கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா

டெல்லி: கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ராஜ்யசபாவில் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி ராஜ்யசபவில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். கீழடி தொடர்பாக கனிமொழி எழுப்பிய கேள்விகள்: 1.தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலத்தைக் கணக்கிட அரசாங்கம் கார்பன் ஆராய்ச்சிக்கு அனுப்பியிருக்கிறதா? 2.அப்படி கார்பன் ஆராய்ச்சிக்கு அனுப்பியிருந்தால் அதன் விவரங்கள், மற்றும் ஆராய்ச்சிப்படி … Read more

துரோகத்தின் மறுபெயர் நிதீஷ்குமார்…

தன் கட்சியை விட குறைந்த அளவு எம்எல்ஏகளையே நிதிஷ் பெற்ற போதும் அவர் முதல்வராக லாலு ஆதரவு தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் ஜனாதிபதி தேர்தலின் போதும் பாஜகவுக்கு ஆதரவளித்து கூட்டணி தர்மத்தை மீறியவர் நிதிஷ்., அப்போதும் பொறுமை காத்தார் லாலு. பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த லாலு ஆட்சியில் ஊழல் என கூறி இப்போது சிபிஐ சோதனை நடத்தியதும் அதுவும் அந்த காலகட்டத்தில் சிறுவனாக இருந்த லாலுவின் மகனும் தற்போதய துணை முதலமைச்சருமான தேஜஸ்வியை அந்த … Read more

மூன்று வருடத்திற்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் மாணவர்களுக்கு செக் வைத்த அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை :படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய உத்தரவை அறிவிக்க உள்ளது. பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதாவது, 2011 ஆம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் … Read more